கிரிக்கெட் வீரர் டோனி இந்தியாவுக்காக ஏற்கனவே கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டார் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷஸ் நெக்ரா தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கு பெறவில்லை இதனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவாரா? அல்லது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இடையில் பெரும் கேள்வியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய ஆஷிஸ் நெக்ரா, கூறுகையில் இந்திய அணிக்காக டோனி இனி விளையாட மாட்டார் என்று நான் நினைப்பதாக கூறினார்.
இதுபற்றி அவர் கூறும்போது,”இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியில் தோனி ஏற்கனவே விளையாடி முடித்து விட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். வரும் ஐபிஎல் போட்டியில் டோனி விளையாடுவதற்கும் சர்வதேச ஒருநாள் போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன் என்று ஆஷிஷ் கூறினார்.