தெலுங்கானாவில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை இளைஞர் ஒருவரை அழைத்து வந்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவும் மல்லேஷ் என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மருமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து சரமாரியாக அடித்து துன்புறுத்தியதால் அந்த பெண் அலறித்துடித்தார்.
இளைஞரின் தாக்குதலால் பலத்த காயமடைந்த இளம்பெண் சுயநினைவை இழந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.