Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த முறை விட்டுற கூடாது…. ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் RCB…. திட்டமிடும் விராட் …!!

ஐபிஎல் T20 போட்டிகளுக்கு கோலி தலைமையின் கீழ் செயல்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தயாராகி வருகிறது. 

வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் நவம்பர் எட்டாம் தேதி வரை யூஏ இவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான அட்டவணைகள் குறித்து ஐபிஎல் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஐபிஎல் அணிகள் யூஏஇ க்கு பயணம் மேற்கொள்ள உள்ளன.

இதைத்தொடர்ந்து அணிகளில் உள்ள அனைவரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். மேலும் தன்னுடைய அணியின் பயணத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி. இந்த பயணத்திற்கான ஒரு முன்னோட்டமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.

Categories

Tech |