Categories
தேசிய செய்திகள்

50 வருடங்களாக… ராமர் கோவில் கட்ட…. புனித நீர், மணல் சேகரித்த… அலைந்து திரிந்த இரட்டையர்கள் ..!!

ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள்.

ராமர் கோவில் கட்ட பூமி பூஜை வருகிற புதன்கிழமை அன்று அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து  ராமன் கோவில் ஒருவழியாக கட்டப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள புனித இடங்களில் இருந்து மணல்கள், ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டு  அயோத்திக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 1968-ம் ஆண்டில் இருந்தே ராமர் கோவில் கட்ட இரு சகோதரர்களான ராதே சியாம் பாண்டே மற்றும் ஷாப்த் வைகியானிக் மகாகவி திரிபாலா ஆகியோர் புனித இடங்களில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் புனித நீர் மற்றும் மணல் போன்றவற்றை சேகரித்து வருகின்றனர். இவர்கள் இலங்கையில் இருந்து 8 ஆறுகள் மற்றும் 3 கடல்களில் இருந்து புனித நீர்களும் 16 இடங்களில் இருந்து மணல்களும் சேகரித்துள்ளனர். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து 150 ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்து தற்போது இவைகளை இரு சகோதரர்களும் அயோத்தி கொண்டு சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,‘‘எப்போது ராமர் கோவில் கட்டப்படுகிறதோ, அப்போது இந்திய ஆறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆற்று புனித நீர்களும், இலங்கையில் இருந்து சேகரிக்கப்பட்ட கடல் மணல்களும் அதில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. ராமர் அருளால் தற்போது இலக்கு அடையப்பட்டுள்ளது. 151 ஆறுகளில் இருந்து புனித நீர் சேகரித்தோம். அதில் 8 பெரிய ஆறுகளில், 3 கடல்களும் அடங்கும். இலங்கையில் 16 இடங்களில் மணல் சேகரித்தோம், மேலும், 1968-ல் இருந்து 2019 வரை நடைபயணம், சைக்கிள், மோட்டார் சைக்கிள், ரெயில், விமானம் மூலம் பயணித்து இதை சேகரித்தேன். புனித நீரை ராமர் கோவில் கட்டுவதற்கு வழங்க விரும்பினேன்’’ என்று ராதே சியாம் பாண்டே கூறியுள்ளார்.

Categories

Tech |