ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமிய இளைஞரை மர்மநபர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் பக்ரீத் தினமானது கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாத இந்துக்களும், கிறிஸ்தவர்களும் தங்களது முஸ்லிம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். வேற்றுமையில் ஒற்றுமை பார்த்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி பழகி வரும் இவர்களுக்கு மத்தியில் ஒரு சிலர் வெறுப்புணர்ச்சியில் செய்யும் கேவல செயல்களால் ஒட்டுமொத்த மதத்திற்கும் அவப்பெயர் வரும் விதமாக சாயம் பூசப்படுகிறது.
அந்த வகையில், நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட பக்ரீத் விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாடு, ஒட்டகம் வெட்ட மத்திய அரசு தடை விதித்திருந்தது. இது ஒருபுறமிருக்க வட மாநிலங்களில் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் மீது தனி வன்முறையை சில மர்ம நபர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில்,
ஹரியானா மாநிலம் குர்கான் என்னும் பகுதியில் லக்மன் கான் என்ற நபர் இறைச்சி கொண்டு சென்றிருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் மாட்டுக்கறி கொண்டு செல்வதாக நினைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி வற்புறுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கப்பட்டவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.