ஜூலை ஏழாம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்கும்படி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூலை ஜூலை 7-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சத்துணவு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என சத்துணவு ஊழியர் சங்கம் விளக்கமளித்துள்ள போதிலும், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கும் சூழ்நிலையில்,
வெளியே வீதிக்கு வந்து இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்ற விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஒரு எச்சரிக்கை கூட கொடுக்காமல் தமிழக அரசு எடுத்த இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.