Categories
தேசிய செய்திகள்

கர்நாடக முதல்வருக்கு கொரோனா – தொண்டர்கள் அதிர்ச்சி ..!!

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,819 ஆக உயர்ந்துள்ளது. அதோடு இன்று 84 பேர் தொற்றினால் மரணமடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 57,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில் 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எடியூரப்பா அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நான் நலமாகத்தான் இருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன் சமீப நாட்களாக என்னை சந்திக்க வந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதோடு சுய தனிமைப்படுத்துதல் கடைபிடியுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

Categories

Tech |