இன்று புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்தாலோசிக்க உள்ளார்.
சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்புகளும் பல ஆதரவுகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் 3 மொழிகள் உள்ளடங்கிய கொள்கையை திணிக்க புதிய கல்வி கொள்கை முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பது என்றும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து ஆலோசனை நடத்த உள்ளார் இன்று நடைபெற இருக்கும் இத்தகைய இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்