மிதுன ராசி அன்பர்களே….! இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். ஆனால் எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் அலட்சியம் மற்றும் காட்ட வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திரஷ்டமம் உள்ளதால் பொறுமையாக அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுங்கள். வாகன பராமரிப்பு செலவு இருக்கும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறில் மாறும். இடம் வாங்கும் முயற்சியை கண்டிப்பாக தள்ளிப்போட வேண்டும். எதிரிகளிடம் கொஞ்சம் விலகியே இருப்பது நல்லது.
குடும்பத்தில் ஓரளவு கலகலப்பான சூழல் இருக்கும். கணவர் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. நீண்ட நாட்களாக இருந்த சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அவருடைய பேச்சில் கண்டிப்பாக இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். எதையும் தீர ஆலோசித்து செய்யுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாக்குறுதிகள் ஏதும் கொடுக்காதீர்கள். மிக முக்கியமாக மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். குழந்தைகள் கல்விக்காக செலவழிக்க வேண்டியிருக்கும்.
பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும். பயணங்கள் அலைச்சல் கொடுப்பதாகவே இருக்கும். சரியான நேரத்திற்கு இன்று அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.