Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…கவலைகள் மறையும்…எதிரிகள் விலகிச்செல்வார்கள்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று தயவுசெய்து எவருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தர வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவைக் கொடுக்கும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு, உடல் நலம் காக்க உதவும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் கொட்டும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.

அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும். வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சாமான்யமான பேசினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். உங்களுடைய சுய சிந்தனையால் முன்னேற்றமான நல்ல விஷயங்கள் நடக்கும்.

காதலருக்கும் எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |