துலாம் ராசி அன்பர்களே…! இன்று சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தன லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்து சேரும். தடை தாமதம் ஏற்படலாம், அலைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம்.
சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வசீகரப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.