மகர ராசி அன்பர்களே …! இன்று மகிழ்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்களின் வருகை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிட பணியை தொடங்கும் எண்ணம் மேலோங்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி கொஞ்சம் காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாகவே இருக்க வேண்டும். முயற்சிகளில் சாதகமான பலனை இன்று கிடைக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வசிகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். அதனால் புதிதாக காதல் வயப்பட்ட கூடிய சூழலும் இருக்கும்.
காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.