மீன ராசி அன்பர்களே…! இன்று அன்புக்குரியவரின் தேவைக்கு உதவி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை செழித்து சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். இன்று இரகசியங்களை மற்றவரிடம் தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதனால் பல காரிய தடைகள் ஏற்பட வேண்டி இருக்கும். நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
அவரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். தயவு செய்து அவர்களை குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். அதேபோல பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாக கூடும். அதனால் பேச்சில் கொஞ்சம் கவனம் என்பது வேண்டும். தந்தை மூலம் செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொஞ்சம் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.