கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனிடையே உயர்கல்விக்கான பணிகளை கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இணைய வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற விஷயங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் இன்று புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பிற மாநிலங்களில் பள்ளி திறப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பள்ளி திறப்பு தேதி இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.