கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடக்கத்தை அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. அதில் கடந்த பொதுமுடக்கத்தில் இருந்த சிலவற்றிற்கு தளர்வுகள் அனுமதித்துள்ள மத்திய அரசு… மாநிலங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கி உள்ளது.
அந்த வகையில் இன்று முதல் இரவு 7 மணி வரை சென்னையில் ஓட்டலில் அமர்ந்து சாப்பிடும் கட்டுப்பாடு தளர்வு அமுலுக்கு வந்துள்ளது. தமிழக அரசு 1-ஆம் தேதி முதல் தளர்வு அறிவித்த நிலையில் ஓட்டல் உரிமையாளர் சங்கங்கள் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. உணவகங்கள், டீக்கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை சாப்பிடவும், 9 மணி வரை பார்சலுக்கு அனுமதி வழங்கியுள்ளது.