Categories
தேசிய செய்திகள்

வானத்தில் எரிபொருள் நிரப்பிய ரபேல் விமானம்… வைரலான வீடியோவின் உண்மை தகவல்….!!

இந்தியாவில் களமிறங்கியுள்ள ரபேல் ஜெட் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சி வலைதளங்களில் பரவி வருவதை பார்த்து அந்த வீடியோ பதிவு பொய்யான செய்தி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சில் இருந்து 5 ரஃபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில், அம்பாலா விமான தளத்தில் ஜூலை 29ம் தேதி களமிறங்கின. ஜூலை 27ம் தேதி பிரான்சில் இருந்து கிளம்பி 7 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. இந்தியா வந்தடையும் முன் இடையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஒருமுறை தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது ஜெட் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் தலைப்பு, ” இந்தியா வரும் வழியில் 30 ஆயிரம் அடி உயரத்தில் ரஃபேல் ஜெட்களுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது” எனும் தலைப்பில் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆனால் அந்த வைரல் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில் அது 2 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அதில்  இருப்பது பிரேசில் விமானப்படையை சேர்ந்த ஏர் ஃபோர்ஸ் எஃப்-5 ரக போர் விமானம் ஆகும். அந்த வீடியோ பதிவில் பிரேசில் கடற்படையின் ஏ-4 போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பும் காட்சி பதிவு செய்யபட்டுள்ளது. இதே வீடியோ அடங்கிய ட்விட்களை 2018, செப்டம்பரில் பிரேசில் விமான படை ஏற்கனவே பதிவிட்டு உள்ளது. அதில் “பிரேசில் கடற்படையின் எஃப்5 போர் விமானம், ஏ-4 போர் விமானத்திற்கு நடுவானில் எரிபொருள் நிரப்புகிறது” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவை ஒப்பிட்டு பார்க்கும் போது வைரல் வீடியோவில் இருப்பது இந்தியா சமீபத்தில் வாங்கிய ரஃபேல் ஜெட் விமானங்கள் இல்லை என தெளிவாகி தெரிகிறது. முன்பு இந்தியா வந்த ரஃபேல் ஜெட் விமானங்களுக்கும் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. தற்போது களமிறங்கியுள்ள ரஃபேல் விமானங்களுக்கும் நடுவானில் எரிபொருள் நிரப்பப்படும் வீடியோவினை இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் தான் ஏற்படுகின்றன. சில சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக பல உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டு வருகிறது.

 

Categories

Tech |