முயல் வேட்டைக்கு தனது நண்பர்களுடன் சென்ற ஒருவர் மீது ஈட்டி தவறுதலாக பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே நண்பர்களுடன் அம்பலசேரி மேல தெருவை சேர்ந்த தங்கதரையினுடைய மகன் இசக்கிமுத்து முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். அங்குள்ள காட்டு பகுதியில் முயல் ஓடுவதை கண்டு இசக்கிமுத்து நண்பர்களில் ஒருவர் ஈட்டியை அந்த முயல் மீது வேகமாக வீசியுள்ளார்.
அப்போது அந்த ஈட்டி எதிர்பாராத விதமாக தவறி இசக்கிமுத்துவின் தலையில் குத்திவிட்டது. இதனால் காயம் அடைந்த இசக்கிமுத்து உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். இசக்கிமுத்துவின் தந்தை கொடுத்த புகாரின் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.