தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டிய சட்டமன்ற தொகுதி வழக்குகள் முடித்து வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி, வருகின்ற ஏப்ரல் 22_ஆம் தேதி இடை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம் :
ஏப்ரல் 29_ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்
ஏப்ரல் 30_ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மே 2_ஆம் தேதியை வேட்பு மனுக்களை திரும்ப பெற காலஅவகாசம்
மே 19_ஆம் தேதி 4 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு பதிவு
மே 23_ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.