விருதுநகர் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்துள்ள புளூடூத், வெட்டி வேருடன் கூடிய மாஸ்க்குகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளனன.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலரான நாகராஜ் புதிய முயற்சியாக வெட்டி வேர் முக கவசத்தை உருவாக்கியுள்ளரர். அதில் தொழில் நுட்ப பிரியர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் புளூடூத் சேவையையும் இணைத்துள்ளார். இந்த முக கவசங்களுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகள் தொடங்கி காவல்துறையினர் வரை அனைவரும் வாடிக்கையாளர்களாக மாறி வருகின்றனர்.
300 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையிலான விலைகளில் இந்த மாஸ்க்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து மாஸ்க்கை தயாரித்துள்ள திரு. நாகராஜ் கூறுகையில் முக கவசத்துடன் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த மாஸ்க் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.