Categories
தேசிய செய்திகள்

“ரக்ஷா பந்தன்” தங்கையின் விருப்பம்… போலீசில் சரணடைந்த நக்சல் இளைஞர்….!!

ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு தனது தங்கையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு நக்சல் படையை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய 12 வயதில் வீட்டை விட்டு ஓடி மல்லா நக்சல் அமைப்பில் சேர்ந்துள்ளார். இவர் நடத்திய தாக்குதலில் ஏராளமான காவல்துறையினர் இறந்துள்ள நிலையில், இவரைப் பிடித்து தருவோருக்கு 8 லட்சம் ரூபாய் பரிசாக தருவதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு தண்டேவாடா மாவட்டத்திலுள்ள பல்நர் கிராமத்துக்கு திரும்பி வந்த மல்லாவுக்கு ராக்கி கயிறு கட்டிவிட்டார் அவருடைய தங்கை. மேலும்  தனது சகோதரனை மீண்டும் நக்சல் அமைப்புக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றும் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் என்றும் தனது ரக்ஷபந்தன் விருப்பத்தை கூறியுள்ளார். சத்தீஷ்கரில் நக்சல் அமைப்பினர் மறு வாழ்வு வாழ உள்ளூர் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் தற்போது காவல் நிலையத்தில் மல்லா சரண் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Categories

Tech |