ரக்ஷாபந்தன் திருநாளை முன்னிட்டு குற்றவாளி ஒருவருக்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுத்த செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரக்ஷாபந்தன் பண்டிகை வடமாநிலங்களில் மட்டுமிலலாமல் பல்வேறு பகுதிகளிலும் இன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்களுக்கும், அவர்கள் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கும் ரக்ஷா பந்தன் நாளில் கையில் கயிறு கட்டி தங்களுடைய பாசத்தை வெளிக்காட்டுவார்கள். இந்த நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் புதிய நிபந்தனையுடன் ஒருவருக்கு ஜாமின் வழங்கியது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனைச் சேர்ந்தவர் விக்ரம் பாக்ரி. இவர் சமீபத்தில் 30 வயது பெண் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறி நடந்து கொண்டதாக ஏப்ரல் 20-ம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். ஜாமின் வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கைகளால் ராக்கி கயிறு வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும். எனவும், 11 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் எனவும் நிபந்தைனையுடன் கூடிய வித்யாசமான ஜாமின் ஒன்றை வழக்கி உள்ளது.
ரக்ஷா பந்தன் நாள் அன்று, சகோதரிகள் ராக்கி கயிறு கட்டியதும் சகோதரர்கள் அவர்களுக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டும் என்பது வழக்கமான ஒரு செயலாகும். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனுக்கு புதுத்துணி மற்றும் இனிப்புகள் வாங்க 5 ஆயிரம் ரூபாய் தனியாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நீதிமன்றம் வித்தியாசமான முறையில் ஜாமீன் வழங்கியது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.