சட்டீஸ்கர் மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் பலோட் என்ற மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது பற்றி பல்லோட் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திரா மீனா கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில், அர்ஜூண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளை தனது வீட்டிற்குள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அழைத்திருக்கிறார்.
பின்னர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சிறுமிகளை ஒவ்வொருவராக தனியாக அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். ஒரு குழந்தை மிக சோர்வாக விளையாட முடியாமல் அமர்ந்து இருப்பதை பார்த்த தாயார் குழந்தையிடம் சென்று விசாரித்த போது நடந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மற்ற 4 சிறுமிகளிடமும் விசாரணை மேற்கொண்டபோது, அனைவரையும் பாலியல் கொடுமை செய்திருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முதியவரை கைது செய்திருக்கிறோம். குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என்று கூறியுள்ளார்.