கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமைச்சர் தங்கமணி 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது மின் கட்டணம் அதிகமாக வருகிறது, மாதமாதம் கணக்கீடும் முறை குறித்து அரசு ஏதாவது முடிவெடுக்குமா ? என்ற பொதுமக்கள் கோரிக்கை குறித்த கேள்விக்கு … காலம் காலமாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் ஒரு மாதத்திற்கு கணக்கீட வேண்டும் என்ற கோரிக்கை அதிகளவு வருவதால் இது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.