Categories
உலக செய்திகள்

மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும் மைக் பாம்பியோ…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

மைக் பாம்பியோ மக்களின் பொது சொத்துக்களை கையாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் பாம்பியோவும் அவரது குடும்பத்தினரும் பொது சொத்துக்களை தங்களின் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியதை பற்றிய பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் கடந்த மாதம் மே திங்கள் முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இது பற்றி வெளியான தகவலில், மைக் பாம்பியோ கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது முதல் வரி செலுத்துவோரின் பணத்தை செலவிட்டு பல்வேறு வட்டாரத்தினர் களை அழைத்து இரவு விருந்து நடத்தியதாகவும், அந்த ஆண்டின் மார்ச் மாதம் வரையில் மொத்தமாக 24 விருந்துகள் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பணி பயணங்களின்போது குடியரசுக் கட்சிக்கு நிதி வழங்குவோர் பாம்பியோ ரகசிய முறையில் சந்தித்தாக குற்றங்கள் எழுந்துள்ளன. பாம்பியோ எதிர்வரும் தேர்தலில் கன்சாஸ் மாநிலத்தின் செனட் அவை உறுப்பினர் பதவிக்காக போட்டியிட உள்ளார். அதே சமயத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தல் போட்டியிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து பாம்பியோ பற்றி புலனாய்வு மேற்கொண்டு வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பொது கண்காணிப்பாளர் ஸ்டீவ் லின்னிக் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதற்கு எதிராக அந்த நாட்டில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |