Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இனிமேலாவது விடிவு காலம் பிறக்கட்டும் – திமுக கான்ஸ்டன்டைன் பேட்டி ..!!

எதிர்க்கட்சியினர் மீதும், ஊடகத்துறையின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருபவர்கள், இணையத்தில் ஊடகத்தை அச்சுறுத்தி தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்பு குழுவினர் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அளித்த பிறகு திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, டிஜிபி நேரடியாக சந்தித்தது புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதைச் செய்வார் என்று நம்புகிறோம். இதன் மூலம் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், இளம்பெண்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும். ஜனநாயகத்தின் கருத்துரிமை காக்கப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Categories

Tech |