Categories
மாநில செய்திகள்

கோரிக்கை வைக்க உரிமை உண்டு…. நன்றி சொல்கிறேன்… முதல்வரை பாராட்டிய வைரமுத்து ..!!

முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருமொழி கல்வி கொள்கை செயல்படும் என அறிவித்ததற்கு வைரமுத்து தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பல அரசியல் கட்சியினர்  கூறி வரும் நிலையில், இன்று ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிறகு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை செயல்படுத்த முடியாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கையே தொடர்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமி எடுத்த இந்த முடிவிற்கு எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் உட்பட பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த முடிவு குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுருப்பதாவது :-” இருமொழிக் கொள்கையில் உறுதிகாட்டியிருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பழனிச்சாமியைப் பாராட்டுகிறேன். தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். கோரிக்கை வைக்க உரிமையிருந்த எனக்கு நன்றி சொல்லும் கடமையுமிருக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |