Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் தடுக்க வந்த மூன்று பேரையும் வெட்டி சாய்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தியமங்கலம் அடுத்த அக்கறை தத்த பள்ளி கிராமத்தை சேர்ந்த பவித்ரா, தனது காதல் கணவர் வீரமணிகண்டன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த மகனை வீரமணிகண்டனும், 9 மாத இளைய மகனை பவித்ராவும் வளர்த்து வந்தனர். இந்தநிலையில் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் பவித்ராவிடம் அவ்வப்போது வீரமணிகண்டன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல நேற்றிரவு நண்பன் ராம்குமாருடன் குடித்துவிட்டு, மனைவியின் வீட்டிற்குச் சென்ற வீரமணிகண்டன் தகராறு செய்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனை தடுக்க வந்த பவித்ராவின் தந்தை சாஸ்தா மூர்த்தி, தாயார் அமுதா, பாட்டி  சீத்தம்மாள் ஆகியோரையும் அரிவாளால் அவர் வெட்டியுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் இருந்த அனைவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பவித்ரா பரிதாபமாக உயிர் இழந்தார். மற்ற மூவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவியை கொலை செய்த கணவர் வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை கைது செய்த பவானிசாகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |