மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலை அளித்த சிறுவனை தட்டிக்கேட்ட சிறுமியின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்துதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர்கள் ராஜா, சுப்பிரமணி, பெரியப்பா மாரியப்பன், அவரது மகன்கள் காந்தாமணி, அருணாச்சலம், நாகராஜ், ஆகிய 6 பேரும் சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த சிறுமியின் தாய் மற்றும் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாய் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பெயரில் மணப்பாறை போலீசார் 15 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல் சிறுமியின் தாய் தாக்கியதாக சிறுவனின் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.