மேஷ ராசி அன்பர்களே …! இன்று முருகன் வழிபாட்டால் ஆனந்தம் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பொருளாதார நிலையும் சீராக இருக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடந்து முடியும். நேற்றைய பணி மீண்டும் இன்று தொடருங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
மற்றவர்களுக்காக பரிந்து பேசும் பொழுதும், அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போதும் கவனம் வேண்டும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அதேபோல் காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பான நாளாக தான் இன்று இருக்கும்.
இன்று முயற்சியின் பேரில் சிறப்பு முன்னேற்றமான விஷயங்களும் நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.