சிம்ம ராசி அன்பர்களே…! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். அயல்நாட்டிலிருந்து அலுவலர் செய்திகள் வந்து சேரும். குடும்பச் செலவுகளில் உதாரணம் காட்டுவார்கள். தொழிலில் புதிய முதலீடு செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். தைரியமாக எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள், சகோதரிகள் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு சரியாகும். அதேபோல புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். முயற்சியின் பேரில் சில முன்னேற்றமான சூழ்நிலை அமையும்.
காதலர்களுக்கு இக்கட்டான சூழல் நிலவினாலும் மாலை நேரத்திற்கு பின்னர் அனைத்தும் சரியாகிவிடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.