Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் செண்டு பூக்கள் விலை வீழ்ச்சி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கால் சாமந்திப் பூவிற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்கானிருப்பு கிராமத்தில் சடையன் காடு, சல்லிக்குளம், நாட்டான் காடு உள்ளிட்ட இடங்களில், சுமார் 700 ஏக்கரில் செண்டு  பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் பூக்கள் பூக்க துவங்கி உள்ள நிலையில், ஊரடங்கால் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ சாமந்தி பூ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது 30 முதல் 40 ரூபாய் மட்டுமே விலை போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |