திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயமடைந்தனர்.
ஆத்தூர் தொகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வன விலங்குகள் காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், உள்ளிடவைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பண்ணைப்பட்டி ஊருக்குள் 40க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றி கூட்டம் புகுந்து எதிர்பட்டவர்களை தாக்கியது.
இந்த தாக்குதலில் லக்ஷ்மி, ராஜேந்திரன், சின்னகாலை ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.