Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆடிமாசம்” அம்மா வீட்டுக்கு போன மனைவி மரணம்….. கணவனும் தற்கொலை….. திருமணமான 2 ½ மாதத்தில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை அருகே திருமணமான இரண்டரை மாதத்தில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லாவரம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரவின். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். பிரவீனும், ஈசா பல்லாவரம் பகுதியில் வசித்துவந்த தீபிகா என்ற 19 வயது பெண்ணும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிய வர, இரண்டு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.

பின் எதிர்ப்பை மீறி இருவரும் சென்ற மே மாதம் எட்டாம் தேதி திருமணம் செய்துகொண்டு, பல்லாவரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காவல் நிலையம் விரைந்து வந்த பெண்ணின் பெற்றோர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைக்க, பெண் பிரவீனுடன் அவரது வீட்டிற்குச் சென்று நன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடி மாதம் என்பதால் பெண்ணை தனது பெற்றோர் வீட்டிற்கு பிரவீன்குமார் அனுப்பி வைத்துள்ளார்.

அனுப்பிவைத்த பத்து நாட்களில் தீபிகா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தீபிகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருமணமான 2 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வழக்கு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி, காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கையில், ஆடி மாதம் என்பதால் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், அதற்கு முன்பாக இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவும், பாசமாகவும் இருந்தோம்.

ஆனால் அம்மா வீட்டிற்குச் சென்ற பிறகு எனக்கு அதிகமான வேலை இருந்ததால் நான் அவரது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அழுகையுடன் தெரிவித்தார். மேலும் மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி தாருங்கள் என அதிகாரிகளிடம் அவர் கேட்க, பெண் வீட்டார் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

அங்கே நீ செல்ல வேண்டாம் என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின் இரண்டு நாள் கழித்து ஆர்டிஓ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் வீட்டிற்குச் சென்ற சில மணி நேரத்தில் மனைவி இறந்த சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதால், குரோம்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |