Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிஸ்னஸ் பண்ணலாம் மாப்ள….. ஆசை காட்டி வரவழைத்து….. மருமகனை போட்டு தள்ளிய மாமனார்….. பரபரப்பு வாக்குமூலம்….!!

தர்மபுரி அருகே மருமகனை மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை அடுத்த திண்ணைப் பகுதியில் வசித்து வந்தவர் விஜய். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிக்கன பள்ளி  பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட ராஜேஸ்வரி திருமணமான சில நாட்கள் கூட அவருடன் வாழாமல் பெற்றோரை பார்க்க துடித்தால் சொந்த ஊருக்கு விஜய்யால் அனுப்பிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். பின் அவரை தொடர்ந்து திடீரென விஜய்யும் சொந்த ஊர் விரைந்து வீட்டிற்கு சென்று தனது பெற்றோர்களை பார்த்துவிட்டு, மாமனார் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்றார்.

வெளியே சென்றவர் பின் வீட்டிற்கு திரும்ப வரவில்லை . இந்நிலையில் பாலக்கோடு பகுதிக்கு அருகே உள்ள பாரூரான் கொட்டாய் என்னும் பகுதியில் விஜய்  உடலில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக காவல் நிலையத்திலும், அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாமனார் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றதால், அவரது மாமனார் உட்பட 4 பேரை பிடித்து விசாரித்ததில், தனது மகளை விஜய் திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை எனவும், வெளியூரில் ஏன் கஷ்டபடுகிறாய்? சொந்த ஊரில் தொழில் செய்து கொள்ளலாம் என ஆசை காட்டி வரவழைத்து அடித்து கொன்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Categories

Tech |