Categories
மாநில செய்திகள்

E-PASS கிடைக்கலையா….. கலெக்டரிடம் செல்லுங்கள்….. அமைச்சர் பேட்டி….!!

இ பாஸ் குறித்த முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர்  தங்கமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அரசின் அறிவுரைப்படி பொதுமக்கள் பாதுகாப்பாக தங்களது வீடுகளில் இருந்து வரும் சூழ்நிலையில், மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்ட அமைச்சர் தங்கமணி, கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் மக்களுக்கான சேவை பணியில் ஈடுபட்டுள்ளார். 14 நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து, முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்றும், மிக முக்கிய நிகழ்வுகளுக்காக இ- பாஸ் விண்ணப்பித்து கிடைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரை அணுகி பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |