Categories
உலக செய்திகள்

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள்… இல்லையேல் தடை விதிப்போம்…. கெடு விதித்த அதிபர் டிரம்ப் ..!!

செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க வேண்டும் இல்லை என்றால் தடை செய்யப்படும் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்டவற்றால் அமெரிக்கா – சீனா மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் வர்த்தக போரை உலக நாடுகள் உன்னிப்பாக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கொரோனா தடுப்பூசி தகவலை சீன திருட முயற்சிக்கிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா சீனா மீது சுமத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப் அதனை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் வுகாண் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடினர். இப்படி இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில்தான் இந்தியாவை சீண்டிய சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா டிக் டாக் உள்ளிட்ட சீன செய்திகளுக்கு தடை விதித்து உலக அரங்கில் அதிரடி காட்டியது. இந்த நடவடிக்கையை அமெரிக்காவும் தற்போது எடுத்துள்ளது.

அமெரிக்காவில் டிக் டாக்கில் 80 மில்லியன் பயனர்கள் இருக்கின்றனர். இதனை தடை செய்வதால் டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டம் அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர் . அரசு தடை விதிப்பதற்கு முன்பாக பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் டிக் டாக் உரிமத்தை விற்றுவிட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதேபோல டிக்டாப் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றால் எந்த தடையும் இல்லை…  இல்லை என்றால் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் டிக் டாக் தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அதிரடியாக தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது… டிக் டாக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சந்திய நாதல்லா அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். டிக் டாக் செயலி சீனா நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பது பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது. அதனால் அதன் உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது அமெரிக்காவைச் சேர்ந்த வேறு பெரு நிறுவனமும் வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. டிக் டாக் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை மட்டும் வாங்குவதை விட்டுவிட்டு 100 சதவீதமான பங்குகளை வாங்குவதும் சுலபமான ஒன்றுதான். அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக் டாக் டிக் டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட தடை விதிக்கப்படும். அதே நேரத்தில் டிக்டாக்கை வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக்டாக்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகை அரசு வழங்கும் வழங்கும் என்று அதிபர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |