Categories
தேசிய செய்திகள்

ஆணும்,பெண்ணும் சமம்…. நாட்டிற்கே வழிகாட்டும் மும்பை…. புதிய முயற்சியை கையிலெடுத்து …!!

இந்தியாவில் முதல் முறையாக ஆண் பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் மும்பையில் உள்ள சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவம் இடம்பெற்றுள்ளது

ஆண் பெண் என இருவரும் சமம் என்பதை உணர்த்தும்விதமாக ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவப்படம் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை சிக்னல் விளக்குகளில் ஆணின் உருவம் தான் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவத்தை இடம்பெறச் செய்துள்ளது

மும்பை மாநகராட்சி. மும்பை மாஹிம் காவல் நிலையம் முதல் பிரபாதேவி வரை இருக்கும் 13 சிக்னல் விளக்குகளில் பெண்ணின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கிரண் கூறுகையில், “ஆண் பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்காக தாதரில் புதிதாய் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

Categories

Tech |