Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…திறமை வெளிப்படும்…முன்னேற்றம் உண்டாகும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆக இருக்கும். ஆதாயம் கிடைக்கும் என நினைத்த காரியத்தில் தாமதம் அதிகரிக்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். உங்களுடைய திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலையே காணப்படும்.

இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஆன போக்கே காணப்படும். செலவு கட்டுக்கடங்காமல் இருக்கும். தேவையான பணவசதி கிடைக்கும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். அதனால் கவலை இல்லை. காதலர்களுக்கும் எந்த விதத்திலும் இன்று முன்னேற்றம் தான் இருக்கும். திருமணத்திற்காக நீங்கள் முடிவு செய்யுங்கள் அனைத்து விஷயம் சிறப்பாகவே இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |