அசுர வேகத்தில் பரவும் கொரோனா தொற்றை மத்திய அரசு திறம்பட கையாளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சட்டி வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை கொரோனா தொற்று குறித்து குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவால் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பான முறையில் வைரஸ் பரவலை கையாளுவதாக பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். சென்ற 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 53,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உலக நாடுகளில் அதிகபட்சமாக ஒரு நாளில் அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாதான் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி ஒரு புள்ளிவிவரத்தினை வெளியிட்டுள்ளார். “சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டதால் இந்தியா மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குகிறது”, என பிரதமர் மோடி கூறியதை மேற்கோளிட்டு ராகுல் காந்தி கொரோனா புள்ளிவிவரத்தினை பகிர்ந்துள்ளார். சென்ற மாதம் ஜூலை 28ம் தேதி புதிய கொரோனா பரிசோதனை மையங்களை திறந்து வைத்த போது பிரதமர் மோடி மேற்கூறியவாறு, கூறியிருந்தார். ஆனால் அதுவரை நாடு முழுவதும் ஏறத்தாழ 45 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் என்ற கோணத்தில் கண்டறியப்பட்டது. ஆனால், ஜூலை 30 லிருந்து இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தினை எட்டி இருக்கிறது.