Categories
தேசிய செய்திகள்

“மந்திரி ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்”… எம்.பி டுவிட்டரில் கேள்வி…!!

மந்திரி அமித்ஷா கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றுள்ளார்? என சசிதரூர் எம்.பி., ட்விட்டரில் கேள்வி கேட்டு வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,00,000ஐ தாண்டியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,135 ஆக உயர்ந்து விட்டது. கள பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு சில மாநிலங்களில் முதலமைச்சர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் களப்பணிகளில் ஈடுப்பட்டு வருபவர்கள் தொடர்ந்து பரிசோதனைகளைச் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 2ம் தேதி உறுதிசெய்யப்பட்ட மந்திரி அமித்ஷா, குர்கானில் உள்ள  மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அமித்ஷா தனியார் மருத்துவமனையில் ஏன் சிகிச்சை பெற்று வருகிறார்? என  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சசி தரூர் இது குறித்து விமர்சனம் செய்துள்ளார். மேலும் இது பற்றி சசி தரூர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்,

அதில் “உண்மை.  நமது உள்துறை மந்திரி, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் செல்ல விரும்பவில்லை, ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என்று யோசித்துப் பாருங்கள்.
பொது மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டுமானால் அரசு நிறுவனங்களுக்கு சக்திவாய்ந்தவர்களின் ஆதரவு தேவை. அரசாங்க பதவியில் இருப்பவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அரசு மருத்துவமனைகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |