Categories
உலக செய்திகள்

நல்ல செய்தி…. கொரோனாவின் பலவீனத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்…. !!

ரஷ்யாவில் இருக்கின்ற ஆராய்ச்சிக் குழு ஒன்று சாதாரண தண்ணீரில் கொரோனாவின் செயல்பாடு குறைந்து விடுவதாக கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டறியும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் தொற்றும் தன்மை மற்றும் அதன் செயல்பாடு பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவின் பலவீனத்தை ஆய்வு செய்து, அதன் மூலமாக ஒரு விஷயத்தை கண்டறிந்திருக்கிறார். அது என்னவென்றால், சாதாரண ரூம் டெம்பரேச்சர் தண்ணீரில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடும் என்று கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சியினை ரஷ்யாவின் வைரலாஜி, பயோ டெக்னாலஜிக்கான வெட்டர் ஸ்டேட் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரஸின் வளர்ச்சியை சாதாரண நீர் தடுத்து விடுகிறது. மேலும் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருக்கின்ற 90 விழுக்காடு சிறு துகள்கள் செயலிழந்து மடிந்து போகின்றன. அதே சமயத்தில் 72 மணி நேரத்திற்குள் 99.9 விழுக்காடு கால்கள் செயலிழந்து விடுகின்றன. சுடுநீரில் கொரோனா வைரஸ் முழுவதுமாக இறந்து விடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குளோரின் தண்ணீரைப் பற்றி கூறுகையில், குளோரின் தண்ணீரும் கொரோனா செயல்பாட்டை குறைப்பதற்கு உதவுகின்றது. இந்த தண்ணீரில் கொரோனா அதிகரிப்பது குறைந்து விடுகிறது. ஆனாலும் சில காலங்கள் வரை அந்த தண்ணீரில் கொரோனாவால் உயிர்பிழைக்க இயலும்.அதேசமயத்தில் தண்ணீரில் வெப்பநிலையானது கொரோனாவில் ஆயுளை தீர்மானிப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

Categories

Tech |