கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்போது மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது பற்றி தனது டுவிட்டரில் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டு இருப்பதாவது, “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளேன்.
அண்மையில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா? என கவனியுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார். ஏற்கனவே
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.