Categories
Uncategorized

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 5….!!

கிரிகோரியன் ஆண்டு :  217 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு :  218 ஆவது நாள்.

ஆண்டு முடிவிற்கு :  148 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

25 – சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார்.

135 – உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது.

910 – தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது.

1100 – இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார்.

1305 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டார்.

1583 – சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜான்சு, நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1600 – இசுக்காட்லாந்து மன்னர் ஆறாம் யேமசு மீதான கோரி கோமகன் ஜான் ரத்வென்னின் கொலை முயற்சி இடம்பெற்றது.

1689 – 1,500 இரக்கேசு இனத்தவர்கள் புதிய பிரான்சின் (இன்றைய கியூபெக்) லாச்சின் நகரைத் தாக்கினர். 250 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1716 – ஆசுத்திரிய-துருப்பிப் போர்: பெத்ரோவராதின் சமரில் துருக்கியின் ஐந்தில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1806 – பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1816 – பிரான்சிசு ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

 

 

1824 – சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860 – சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.

1861 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874 – சப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.

1884 – விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1906 – ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1914 – முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

 

 

1916 – முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சூயசு கால்வாயைத் தம் வசப்படுத்தினர்.

1926 – அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.

1949 – எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.

1960 – புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963 – பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

 

 

1965 – பாக்கித்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய-பாக்கித்தான் போர் ஆரம்பமானது.

1971 – முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.

1979 – ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

1981 – வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984 – வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.[2]

1989 – நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்றது.

1995 – யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

2010 – ஆப்கானித்தான், படாக்சான் மாகானத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012 – அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.

 

 

பிறப்புகள்:

1681 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு நாடுகாண் பயணி (இ. 1741)

1802 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (இ. 1829)

1850 – மாப்பசான், பிரான்சியக் கவிஞர் (இ. 1893)

1898 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, தமிழக கருநாடக வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)

1905 – மு. அ. முத்தையா செட்டியார், தமிழக அரசியல்வாதி, சமூக சேவகர் (இ. 1984)

1908 – ஹரல்ட் ஹோல்ட், ஆத்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)

1915 – ஹரி கிருஷ்ண கோனார், மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1974)

1923 – தேவன் நாயர், சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவர் (இ. 2005)

1926 – சோ. அழகர்சாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2009)

1927 – ஜே. பி. சந்திரபாபு, தமிழக நகைச்சுவை நடிகர், பாடகர் (இ. 1974)

1930 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 2012)

1931 – பாப்பா உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2010)

1934 – கே. பாலாஜி, திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் (இ. 2009)

1947 – பிரான்சு ஆன்னி கோர்தவா, அமெரிக்க வானியற்பியலாளர்

1961 – அதுல சமரசேகர, இலங்கைத் துடுப்பாளர், பயிற்சியாளர்

1968 – நளாயினி தாமரைச்செல்வன், ஈழத்து எழுத்தாளர்

1968 – மரீன் லெ பென், பிரான்சிய அரசியல்வாதி

1970 – ஜேம்ஸ் கன், அமெரிக்க இயக்குநர், நடிகர்

1974 – கஜோல், இந்திய நடிகை

1987 – ஜெனிலியா, இந்திய நடிகை

 

இறப்புகள்:

1895 – பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய மெய்யியலாளர், மார்க்சியவாதி (பி. 1820)

1962 – மர்லின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)

1971 – கே. ஆர். ராமசாமி, தமிழக நாடக, திரைப்பட நடிகர், பாடகர்

1983 – பார்ட் போக், டச்சு-அமெரிக்க வானியலாளர் (பி. 1906)

1983 – ஜோன் இராபின்சன், ஆங்கிலேயப் பொருளியலாளர் (பி. 1903)

1991 – சோய்செரோ ஹோண்டா, சப்பானியத் தொழிலதிபர், பொறியியலாளர் (பி. 1906)

2000 – அலெக் கின்னஸ், ஆங்கிலேய நடிகர் (பி. 1914)

2000 – லாலா அமர்நாத், இந்தியத் துடுப்பாளர் (பி. 1911)

2001 – அரசு மணிமேகலை, தமிழக எழுத்தாளர் (பி. 1945)

2019 – சாலிந்த திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி (பி. 1958)

2019 – டோனி மாரிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1931)

சிறப்பு நாள்:

வெற்றி நாள் (குரோவாசியா)

விடுதலை நாள் (புர்க்கினா பாசோ)

 

Categories

Tech |