Categories
தேசிய செய்திகள்

மும்பையில் கொட்டி தீர்க்‍கும் கனமழை – மக்‍கள் அவதி…!!

மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மும்பையில் கடந்த பத்து மணி நேரத்தில் 230 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததால் அந்த நகரமே வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருந்து வருக்கிறது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் மழை பொழிவு கடுமையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த காற்று மற்றும்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. அங்குள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெய்து வரும் கன மழையால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தனர். கடந்த பத்து மணி நேரத்தில் மும்பை நகரில் 230 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாக்கியதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |