Categories
மாநில செய்திகள்

20-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!

100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வரும் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி பகுதி நேரம் மட்டுமே இயங்கி வரும் நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் முழு நேரமும் இயங்க வேண்டும் என்றும், 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு இருபதாம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலை 11 மணி முதல் பகல் 2 மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் பொது போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத நேரத்தில், 100 சதவீத ஊழியர்கள் எப்படி பணிக்கு வர முடியும் என்றும் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Categories

Tech |