நாட்டில் உற்பத்தி துறை செயல்பாடு மிகவும் சரிவடைந்துள்ளதாக மாதாந்திர கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எச்.எஸ் மார்கிட் இந்தியா நாட்டின் உற்பத்தித் துறை பற்றி மாதாந்திர கணக்கெடுப்பு ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில், கடந்த ஜூலை மாதத்தின் உற்பத்தி கொள்முதல் ஆனது பிஎம்ஐ தரவு 46 ஆக இருக்கின்றது. ஆனால் சென்ற ஜூன் மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 47.2 ஆக இருந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரே மாதத்தில் ஒரு விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது. அதற்கு காரணம் ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் தேவை குறைந்ததும், நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையும் மற்றும் பயனர்களின் எண்ணிக்கையும் குறைந்தது தான் என்று கருதப்படுகின்றது.
இதுபற்றி ஐ.எச்.எஸ் மார்க்கிட்டின் பொருளாதார நிபுணர் எலியட் கெர் கூறும்போது, இந்திய உற்பத்தியாளர்களின் தற்போதைய பிஎம்ஐ தரவு ஆனது கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பொருளாதார நிலைமையை வெளிக்காட்டுகின்றது. மேலும் கணக்கெடுப்பின் முடிவுகள், உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்களின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. மேலும் நிறுவனங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஊரடங்கு காலத்தால் சொந்த ஊர்களில் சிக்கியுள்ளனர். கொரோனா பாதிப்பு சதவீதம் குறையும் வரையிலும், கட்டுப்பாடுகளை அகற்றும் வரையிலும் நாங்கள் நிறுவனங்களின் செயல்பாட்டை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள மாட்டோம்.
ஊரடங்கு காலகட்டம் இன்னும் நீட்டிக்கப்படுவதால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. ஏற்றுமதி ஆர்டர்களும் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளன. கொரோனா தாக்கம் அதிக அளவு பரவி கொண்டிருப்பதால் சர்வதேச வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆர்டர்களை வழங்குவதற்கு மிகவும் தயக்கம் கொள்கின்றனர். மேலும் பல்வேறு மூலப் பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், பெரும்பாலான பொருள்களின் உற்பத்தியும் அதன் தேவையும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குரோனா நெருக்கடியை சமாளித்து பொருளாதாரத்தையும், உற்பத்தியையும் விரைவில் மேம்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.