அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்கு இந்திய அமெரிக்கர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று டொனால்ட் டிரம்பின் மகன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் தேர்தல் பிரசார வியூகங்களுக்கு தலைமை வகித்து வருகிறார். அவர் கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தனது கட்டுரை பக்கத்தில், அதிபர் தேர்தலில் முக்கியமான மாகாணங்களில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையில் பல்வேறு சாதகமான விஷயங்கள் இருக்கின்றன என பதிவிட்டிருக்கிறார். ட்ரம்ப் ஆதரவாளரான அல் மேசன் எழுதி இருக்கின்ற கட்டுரையில், அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களில் இருக்கின்ற இந்தியா அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் ஜனநாயக கட்சிக்கான தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டு டிரம்பிற்கு ஆதரவு அளிப்பார்கள் என கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய முக்கிய மாகாணங்களான ஃபுளோரிடா, விர்ஜினியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய இடங்களில் இந்தியர்களின் வாக்குகள் முழுவதும் அவருக்கே கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடக்க இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். மேலும் பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகள் ஜோ பிடன் டிரம்பை விட முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.