Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்டுப்பிட் கோவிட்” கோபத்தை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன்…!!

நடிகை மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளான இன்று “ஸ்டுப்பிட் கோவிட்” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே ‘மாஸ்டர்’ படம் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியிடவில்லை. இப்படம் எப்போது வெளியாகும் என சொல்ல இயலாத நிலையில் உள்ளது. இதற்கிடையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அளவிற்கு அவருடைய ரசிகர்கள் ‘Common DP ‘ ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதை வெளியிட்டார். அவர்களுக்கு நன்றி தெரிவித்த மாளவிகா” மாஸ்டர் டீமுடன் இந்த பிறந்த நாளை சென்னையில் கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டுப்பிட் கோவிட்” என கோபத்துடன் பதிவிட்டுள்ளார். திட்டமிட்டபடி மாஸ்டர் படம் வெளியாகி இருந்தால் இந்த வருட பிறந்த நாள் மாளவிகாவிற்கு மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும் அப்படிப்பட்ட நல்ல வாய்ப்பை கொரோனா தொற்று கெடுத்துவிட்டது என்பது அவரது கோபமாகிவிட்டது.

Categories

Tech |