தமிழகத்தில் நீலகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது.