இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊராடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பிப்பதற்காக, ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சமயத்தில், மொபைல், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இல்லாதவர்களுக்காக தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் இன்று முதல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
அதனுடைய விவரங்கள் பின் வருமாறு, 2,5,7 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு பாலிமர் டிவி, 10ஆம் வகுப்பு – புதுயுகம் டிவி, 3 மற்றும் 9ஆம் வகுப்பு -ராஜ் டிவி, மூன்று மற்றும் ஆறாம் வகுப்பு வசந்த் டிவி, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கேப்டன் நியூஸ், 2 முதல் பத்தாம் வகுப்பு SCV கல்வி, மூன்று மற்றும் ஆறாம் வகுப்பு – சத்தியம் டிவி, ஒன்பதாம் வகுப்பு – லோட்டஸ் டிவி, எட்டாம் வகுப்பு – மதிமுகம் டிவி, 2 மற்றும் பத்தாம் வகுப்பு – மக்கள் டிவி மாணவர்கள் அவர்களுக்கு ஏற்ற பாடங்களை மேற்கண்ட தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக படித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.